Friday, November 13, 2015

பீஹார் தேர்தல்

வெற்றி என்றால் மோடியின் தலைக்கு கிரீடம் அலங்கரிப்பவர்கள்... தோல்வி என்றால் மட்டும் ஒட்டுமொத்த கட்சியை பொறுப்பாக்கும் அவலட்சணங்கள் பாஜகவிலும் அரங்கேற ஆரம்பித்து விட்டன...
இது அந்த கட்சி இறங்குவரிசையை நோக்கி செல்வதை தான் அப்பட்டமாக காட்டுகிறது..!!

பாரதீய ஜனதா;
பாராளுமன்ற தேர்தலில் என்ன வியூகத்தை செயல்படுத்தியதோ அதே வியூகத்தை தான் டெல்லி தேர்தலிலும் , பீஹார் தேர்தலிலும் ,செயல்படுத்தியது.
முன்பைவிட இரட்டிப்பு வேகத்தில்: ஏனென்றால் அரசுஇயந்திரம் கையில் உள்ளதல்லவா!!!!அதனால்...!!

இருந்தும் பீகாரில் படுதோல்வியை சந்தித்ததை மோடி&கோ ..வினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...!!!
காரணம் தேடி அலைந்தவர்கள் ஒட்டுமொத்த கட்சியை பலியாக்க துணிந்த போதுதான் அத்வானியும் ,முரளிமனோகர் ஜோசியும்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், சத்ருகன் சின்கா அதை வழிமொழிந்தார் ...!!

உண்மை என்னவெனில்...
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதற்கு மோடியை விட மிகமுக்கிய காரணகர்த்தா ஒருவர் இருக்கிறார்..

அவர் தான் "மன்மோகன் சிங்"..!!!

அவரின் ஆளுமை திறனில் உள்ள ஓட்டைகளால்,மக்களின் எதிர்பார்ப்பு மோடியின் மீது திரும்பியது...!!
அதனால் பாரதீயஜனதாவுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்தது...!!
அதை ஏதோ மோடியால் கிடைத்த மாம்பழமாக, அமைச்சர் பதவிக்காக காத்துக்கிடந்தவர்கள் கொக்கரித்து, கட்சியையும் கைப்பற்றினர்...!!
தேர்தலில் வாக்குறுதியை அள்ளிவீசிய மோடியால் எதையும் நிறைவேற்ற முடியாமல் போனதும்
மக்களின் எதிர்பார்ப்பை சிறிதும் நிறைவேற்றாத முடியாத மோடியால் மக்களின் நாயகனாக, வளர்ச்சியின் நாயகனாக வெறும் விளம்பரம்தான் செய்யமுடிகிறது... ஆனால்... மக்கள் அவரோடு இல்லை, என்பதற்கான சிறிய உதாரணம் தான், டெல்லி தேர்தலும், பீஹார் தேர்தல் முடிவுகளும்....

இன்று....

"மன்மோகன் சிங்'கள்" இல்லை...
ஆதலால்.. பாஜகவிற்கு வெற்றியும் இல்லை...!!!

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...