Friday, November 13, 2015
தீபாவளி கவிதைகள்
" தீபாவளி சிறப்பு கவிதைகள் ...;”
=============================≠====
வெளிநாடு சென்றது அன்பு...
வாட்ஸ்ஆப்பில் வருகிறது வாழ்த்து....
ஆண்ட்ராய்டில்...
தீபாவளி கொண்டாட்டம்...!!!
வெளிநாட்டு கணவன்...!!!
===========================
தேடியலைகிறது காவல்துறை
கொலை செய்தது எவரோ???
............ ....... ..........
தெருவெங்கும்...
பட்டாசு பிரேதங்கள்...!!!
===========================
நாம்...
ஒருநாள் மகிழ்வதற்காய்...
வருடமுழுதும் சிதைகிறான்....
பட்டாசு ஆலையில்
தொழிலாளி....!!!
≠=============================
வீதியெங்கும் சிதறிக்கிடக்கிறது....!!!
பட்டாசுத்தாள்கள்...!!!
எந்த அப்பாவின் பணத்தாள்களோ ...???
===================================
பண்டிகையை...
பணமாக்கியது...!
டாஸ்மாக்...!!!?????
================================
அடைபட்ட கடன்....
உயிர்பெற்றது....
அடுத்த பண்டிகையின்
வரவால்...!!??
.===============================
=================================











சிந்திக்க வைத்த தீபாவளி கவிதைகள்
ReplyDelete