Thursday, October 15, 2015

சரியான பாதைக்கு இடதுபக்கம் செல்லவும்...!!

"அரசியல் எனக்கு பிடிக்கும்...."

    இது ச.தமிழ் செல்வன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் தலைப்பு... தலைப்பை போலவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் அரசியலின் ஒவ்வொரு சந்துபொந்துகளை எல்லாம் அலசிஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது...
அந்த புத்தகத்தை படித்து ஆறு, ஏழு வருடங்கள் கடந்தாலும் இன்னும் அரசியல் பற்றிய பாலபாடமாக அந்த புத்தகம்தான் விளங்குகிறது...!!

அரசியல் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் யார்வேண்டுமானாலும், முதலில் படிக்க வேண்டிய புத்தகம்.. அது!!

அரசியல் என்றால் என்ன??
அரசியலின் பணி என்ன??
அரசு எதற்காக ஏற்படுத்தப்பட்டது??
அரசை இயக்குவது யார்??
ஒவ்வொரு நாட்டின் அரசியல் முறை என்ன??
இப்படி ஒவ்வொரு அங்கங்களையும்  அலசி தெளிவுபடுத்தும் ஓர் அற்புதமான புத்தகம் அது...!!

சிலர் சொல்வதுண்டு,அரசியலும், அரசியல் வாதிகளும் சுத்த வேஸ்ட் என, யாரும் சுத்தமில்லை, எல்லாம் ஊழல்,கொள்ளையடிப்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்... என்று..!!

கொள்ளையடிக்காதவர்களும் அரசியலில் இருக்கிறாகள் என்பதை
ஒரு தேசத்தின் அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...!!

ஆம்.... அவர்கள் தான்....
    "கம்யூனிஸ்ட்கள்"...!!!!
இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரே தேசிய அரசியல் கட்சி இதுமட்டுமே.....!!!
இந்த ஒன்று தான் என்னை இந்த இயக்கத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது...!!!

மேற்குவங்கத்தில் இரண்டு முதலமைச்சர்கள் 35 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்துள்ளனர்,திரிபுராவில் 20 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்கின்றனர், கேரளாவில் பலவருடங்கள் ஆட்சி செய்தும் இன்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத ஒரே நேர்மையான இயக்கமாக இன்று வரை இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே உள்ளன....!!

உங்களுக்கு சந்தேகம் வரலாம்...
ஏனெனில் எனக்கும் வந்தது...!!
நான் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன்...!!
நீங்கள்????

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...