Sunday, October 11, 2015

நகைச்சுவை

உங்களுக்காக ஒரு நகைச்சுவை:
==============================

ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரியிலிருந்து இரண்டு பைத்தியங்கள் தப்பிஓடி  வந்துவிட்டன...!!
இரண்டு பைத்தியங்களும் தனிமையில் ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் சந்தித்து கொண்டன...
அப்போது...
ஒரு பைத்தியம் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு டார்ச் லைட்டை எடுத்தது...
அந்த லைட்டை அடிக்கடி அணைத்தும், எரியவைத்தும், விளையாடி கொண்டிருந்தது... அதை, அருகிலுள்ள மற்றொரு பைத்தியம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது...

திடீரென முதல் பைத்தியம் கேட்டது...

இந்த லைட்டோட வெளிச்சம் எவ்வளவு தூரம் போகும்?? என...

அதற்கு.. மற்றொரு பைத்தியம் சொன்னது...
ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் போகும்... என...
அதற்கு முதல் பைத்தியம் மறுப்பு தெரிவிக்கவே ...
இருவருக்குள்ளும்,வாக்குவாதம் ஏற்பட்டது,
முடிவில் இரண்டும் ஒரு முடிவிற்கு வந்தன...
டார்ச்சை கையில் வைத்திருந்த பைத்தியம் சொன்னது...

"இந்த லைட்டை எரியும் படியாக
நான் வானத்தை நோக்கி உயர்த்தி வைத்து கொள்கிறேன்....
நீ அந்த ஒளியை பிடித்து மேலே ஏறு,
ஏறி அந்த ஒளி எவ்வளவு தூரம் செல்கிறது என நீ கூறினால் நான் ஏற்றுக் கொள்கிறேன்".... என....

அதற்கு..
மற்றொரு பைத்தியமும் சரி என தலையத்து ஏறுவதற்கு ஆயத்தமானது....

திடீரென...

அந்த பைத்தியம் சுதாகரித்து ஒரு கேள்வி கேட்டது....

"ஆமா...
என்னை என்ன..பைத்தியம் என நினைச்சியா??
நான் ஏறிக்கிட்டு இருக்கும் போது ,
நீ லைட்ட அணைச்சிட்டா,
நா கீழ விழுந்திருவேனே....."...

என சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டான்....!!!!
===============================

3 comments:

  1. சரியாத்தான் சொல்லியிருக்கு!
    ரசித்தேன்

    ReplyDelete
  2. இந்த கேவலத்தை, அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?

    என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா?
    அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

    அனைவரும்

    க்ளிக் செய்து >>> “இங்கே" <<<< படித்து சிந்தியுங்கள்.

    .

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும்,கருத்துக்கும், மிக்க நன்றி... சென்னை பித்தன்...்!!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...