Sunday, October 11, 2015
சகாயங்கள் தேவை.!!
"சகாயம் ,IAS"....
============
-இந்தபெயரைக்கேட்டாலே,
" ஊழல்" என்கிற வார்த்தை கூட பயப்படும் ...!!
"புதுக்கோட்டையில் பிறந்து நேர்மையின் கோட்டையாக மாறிய சகாயம்:-"
மெலிந்த தேகம், நல்ல உயரமான மனிதர், அவரது துணிச்சலைப்போலவே,நேர்மைக்கும் அவரிடம் குறையில்லை..!!
கோக்ககோலா கம்பெனியை சீல் வைக்க செல்கிறேன், அதனால் டிரெஸ்,அனைத்தையும் பேக் பண்ணி வை,என போகும்போதே மனைவியிடம் சொல்லிசென்ற துணிச்சல்காரன்..!!
செத்த பிணங்களை கூட தோண்டி எடுத்து விடுவார்கள் என இரவெல்லாம் சுடுகாட்டிலேயே கட்டில் போட்டு படுத்துறங்கிய தைரியசாலி ....!!
நேர்மைக்கு மதிப்பில்லை,
யாரும் நாணயமாக நடப்பதில்லை, எல்லோரும் "நாணயத்திற்காகத்தான்", நடக்கின்றனர்.... என்பன போன்ற வாதங்கள் உள்ளன, அதில் உண்மை இல்லாமலும் இல்லை...
இருந்தாலும் இதுபோன்ற வாதங்களை உடைக்கும் சுத்தியலாக சகாயம் போன்ற மனிதர்கள் நம்மோடு வாழ்கிறார்கள்...!!
2011 சட்டமன்ற தேர்தலில் அழகிரியோடு மோதும்போதும் சரி,அடுத்த அதிமுக ஆட்சியில்,அரசுக்கு ஒத்துவராததால் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றபட்ட போதும் சரி, அங்கு அமைச்சர் கோகுல இந்திராவுடன் மோதல் காரணமாக மருத்துவ துறைக்கு மாற்றபட்ட போதும் சரி, எதிலுமே அரசியல் வாதிகளிடம் சமரசம் செய்யாத ஒரு போர்வீரன் தான் இந்த சகாயம்...
அதுமட்டுமன்றி, தமிழகத்தில் தன் சொத்து விபரங்களை வெளியிட்ட முதல் ஐஏஎஸ் ம் இவரே..!!
"23- வருடத்தில் 24-பணியிடமாற்றம்"-
குறுகிய காலத்தில் அதிகமான பணியிட மாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழல் இந்த மனிதருக்கு மட்டுமல்ல,நேர்மையாய் வாழும் அனைத்து அதிகாரிகளும் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.மேலதிகாரிகளின்,ஊழல் அரசியல்வாதிகளின், கைபாவையாக மாறாத அதிகாரிகள் பந்தாடபடுவது அன்றிலிருந்து ,இன்று வரை தொடர்கதையாகத்தான் இருந்துவருகிறது..!!
இந்த நிலை மாறி வரும் தலைமுறையாவது மனிதநேயமுள்ள சகமனிதர்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்த மனிதனாக வளர வேண்டும், அதற்கு இது போன்ற" சகாயங்கள்" கட்டாயத் தேவையாக உள்ளார்கள்...!!!
சமூகத்தில் அதிகமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு
இவர்களுக்கு அதிகம்.இதனால் இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல..
அதனால் மனநெருக்கடிக்கு அதிகமாக ஆளாகி என்ன செய்வதென தெரியாமல் தற்கொலையை முடிவாக தேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவது வருந்த தக்க செயல்...!!கண்டிக்க படவேண்டியதும் கூட....!!
இவர்களை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் என்றும் துணைநின்று அடுத்த தலைமுறைக்கு நேர்மை என்கிற பொக்கிஷத்தை எடுத்து செல்லும் கடமை நம் எல்லோருக்கும் உள்ளது...!!!
ஏனெனில் நமக்கு இன்னும் நிறைய "சகாயங்கள்" தேவைபடுகிறார்கள்...
நம் தேசத்தின் நிலைமை கருதி....!!!"
====[ The great salute sahayam ]======
Tweet











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...