Wednesday, September 30, 2015

பள்ளிகூடம் எனும் பேக்டரிகள்....

முகமூடி
அணியாத
கொள்ளைக்கூட்டம்....
                     -பள்ளிகூடம்....!!!
===================================
தற்கால பள்ளிகூடத்தின் முகமூடியை கிழித்தெறிகிறது.....இந்த கவிதை...!!
        மனப்பாடம் செய்ய தெரிந்த மாணவர்களே.. முதல் மாணவர்கள்..!! என்கிறது இப்போதைய கல்விமுறை...!!
பிராய்லர் கோழிகளை போல வெற்று மதிப்பெண் அடிப்படையிலான கல்விமுறையை  அமல்படுத்தி அதற்கு விருதும் வழங்குகிறது... நம் அரசு...!!
       அரசின் கவனம் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவது எப்படி என சிந்தித்து கொண்டிருப்பதால் கல்விதுறையை  கவனிக்க நேரமின்றி அலைகிறது... தமிழக அரசு...!!
    பெற்றோர்களும்...  நாளைய திருமணசந்தையில்  மகனையோ,மகளையோ, அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலையின் காரணமாக இதுபோன்ற பேக்டரிகளில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்..!!
    கல்விகூடமோ  மாணவர்கள் மதிப்பெண்களை அதிகமாக எடுத்தால் தான் வரும் காலங்களில் கல்வி கட்டணத்தை உயர்த்த முடியும் என்கிற நிலை காரணமாக, அவர்களே கேள்வித் தாளை திருடி மாணவர்களுக்கு கொடுக்கும் அவல நிலையும் கடந்த காலங்களில் நடக்கத்தான் செய்தது..!!
இதை எப்படி பாடசாலை என கூற முடியும்..??? தொழிற்சாலை என கூறுவதே சரியாக இருக்கும்...!!
         எவ்வளவு கொள்ளையடித்தாலும்
ஆசிரியர்களுக்கும், வேலைசெய்வோருக்கும் கொடுக்கும் சம்பளம் என்பதோ மிக மிக குறைவு...!!
குறைந்த சம்பளம் வாங்கும் அவர்கள் எப்படி அர்பணிப்புடன் வேலை செய்வார்கள்???
  தனியார் பள்ளி, மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துவதற்காக ,அவர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாத அவலங்கள்..!!காலையில் 8:30க்கு பள்ளி ஆரம்பிக்கிறது என்றால் ,காலை 6:30லிருந்து இரண்டு மணிநேரம் டியூசன், மாலை 5மணிக்கு பள்ளி விட்டபின் இரண்டு மணிநேர டியூசன், என படி, படி எனக் கூறி படிப்பின் மீதே ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்... விளைவு மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களை ஒருவித மனநோயாளியாக மாற்றுகிறது..!!
ஆனால்...
ஒருவிதத்தில் எல்லோரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதுஎன்னவென்றால்...அரசு பள்ளி என்றாலே ஏதோ தீண்ட தகாதது போல ஒரு  போலியான பிம்பத்தை உருவாக்கு வதில்  தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதுவும் சமீபகாலமாக உட்பட்டு வருகிறது...!! மகிழ்ச்சி அளிக்கிறது...!!!

இனியும் நாம் விழிக்க வில்லையெனில், எதிர்கால சமுதாயம் ,போலியான, ஒரு ஆரோக்கியமற்ற சமூகமாத்தான் இருக்கும்,என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்...!!

2 comments:

  1. தங்கள் வருகைக்கும், விமர்சனத்திற்கும், மிக்க நன்றி... சென்னைபித்தன் அவர்களே...!!!
    பள்ளி கல்விதுறையின் அவலங்களை அலசவேண்டிய தருணம் இது...!!!
    இனியும் தாமதித்தால் எதிர்கால சமுதாயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்....!!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...