Tuesday, September 29, 2015
சமூக கடமை
எல்லா வசதிகளையும் இன்று வரையில் அனுபவித்த நாம் ..இதை அடுத்து வரும் தலைமுறைக்கு திருப்பி கொடுக்கவேண்டுமல்லவா..
நமக்கு வாங்கிய பொருளை திருப்பி கொடுக்கும் பழக்கம் தான் குறைந்துவிட்டதே..
அன்று நாம் 6 வயதில் பள்ளிக்கு சென்றோம் ..அதுவரையில் நாம் உறவினர்களோடும் நண்பர்களோடும் நாளையும் பொழுதையும் கழித்து நாம் அடைந்த இன்பங்களுக்கு அளவில்லை..
இன்றோ..
3வயதில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடும் பெற்றோர்களுக்கு, பொருளாதார தேடலிலே நேரம் சரியாகிவிடுகிறது. குழந்தைகளிடம் அன்பு செலுத்தகூட நேரமின்றி பணம் தேடி அலைகிறோம் நாமெல்லாம்...!!
இந்த இடைபட்ட காலத்தில் குழந்தைகள் தவறான பழக்கத்தை தன் மனதில் பதியம் போட்டு விடுகின்றனர்...
நாளைடைவில் மரமாக மாறி நம் வாழ்க்கையை மட்டுமல்லாது, அவர்கள் வாழ்க்கையையும் நாசமாக்கிவிடுகிறது..!!
நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மறந்து நாம் உருவாக்கும் பொருளாதாரம், அவர்களின் வாழ்க்கையை பணயம் வைத்து தான் நடக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டிய தருணம் இது...!!
காலையில் எழும்பிய உடன் பள்ளிக்கு செல்வதும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பவும் டியூசன், அது முடித்து வீடுதிரும்பியதும் இரவு உணவு, அதன் பின் உறக்கம் என இப்படியே இயந்திர தனமாக மாறிபோய்விடுகிறது...
அந்த பிஞ்சுகளின் வாழ்க்கை...!!
பின் அவர்களிடம் எப்படி நாம் அன்பையும், பண்பையும், பாசத்தையும் எதிர்பார்ப்பது ,எவ்விதத்திலும் நியாயமில்லை ....!!
குழந்தைகளுக்கு வாழ்க்கையை வாழகற்றுக் கொடுங்கள்...!!
வாழும்போதும் ,அன்பையும், பண்பையும்,பாசத்தையும்,வழங்கி சரியான நடத்தைகளையும், சொல்லி கொடுத்து, உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல ,இந்த சமூகத்திற்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்வோம்...!!











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...