Friday, July 24, 2015

காதலெனும் வியாதி

காதல் ...

இது இப்போது மட்டுமல்ல...
எப்போதும் ....
இனிமையானது ...!!
இளமையானது ...!!

எவ்வளவோ காதலர்கள் அழிந்திருக்கிறார்கள் ...
அல்லது அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..!!
ஆனால் ...
நூற்றாண்டு கடந்தும் காதல்  அழியவில்லை  ...!
அதே இளமையுடன்...
அதே கவர்ச்சியுடன...
இன்றும் ..
இந்த ஆண்ட்ராய்டு காலத்திலும் நம்மோடு உலா வருகிறது...!!

ஆனால்..
காதல் என்றால் என்ன??
என்பதில் நம் இளைஞர்களிடையே நிறைய குழப்பம் உள்ளது....!!

சினிமா என்கிற சாராயம் குடித்து மதிமயக்கத்தில், கதாநாயகன் செய்யும் லீலைகளை நிஜத்தில் செய்து பார்க்க துடித்து, தோல்வியடைகின்றனர்...!!
       விளைவு;
விபரீதமாக முடிகிறது!!
போராட துணிந்தால் மட்டுமே காதலிக்க ஆரம்பியுங்கள்...
இல்லையெனில், திருமணத்திற்கு பின்பு, காதலியுங்கள்...!!
மரணம் ஒருபோதும் காதலுக்கு முடிவாகது...!!
சொர்க்கத்தில் தான் சேர்வோம் என்றால்...
அதற்கு காதலிக்காமலே இருந்துவிடலாமே...!!

காதலர்கள்...
மரணித்து காதலுக்கு அவபூச்சு பூசுவதால்,காதல் என்றாலே தவறு என்கிற பார்வை சமூகத்தில் ஆழமாய் பரவியிருக்கிறது...!!

இனிமேலும்....
சினிமா நடிகர்கள் எனும் ,
கூத்தாடிகளை கண்டு மயக்கம் கொள்ளாது,
தெளிவாய் நடை போடு.. இளையசமூதாயமே...!!

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...