Wednesday, July 22, 2015

அரசு அரக்கன் ..."டாஸ்மாக்"

எல்லா அரசியல் கட்சிகளும் மதுஒழிப்பு என்கிற ஒரே குடையின் கீழ் வர துவங்கியுள்ளதால் இதை தமிழகத்திற்கான ஒரு விடிவுகாலமாகத்தான் கருதவேண்டும் ....!!
அதிமுக அமைச்சரவை கூட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவசர அவசரமாக திமூக மதுஒழிப்புக்கான அறிவிப்பை அறிவித்தாலும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் கருதவேண்டியதிருக்கிறது ...!!

இருந்தாலும்....
நல்லது நடந்தால் சரி என்கிற மனநிலையில் தான் எல்லா சமூக ஆர்வலர்களும் உள்ளார்கள் ...!

மதுசீரழிவின் கடைசி கட்டத்தில் தான் தமிழகம் தத்தளிக்கிறது ....!
இலவசங்களை கொடுத்து தமிழக தாய்மார்களின் தாலியையும் இலவசமாக வாங்கி கொள்கிறது ....
                 தமிழக அரசு ...!!??

பள்ளி மாணவிகள்..
மது அருந்தி சாலையில் போதையில் தள்ளாடுகையில் ...
தற்கொலை செய்து கொள்கிறது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் ??!
ஐந்து வயது சிறுவன் மது அருந்துவதை கூட சாதாரணமாக ஏற்று கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறான் சகமனிதன் ....!!???

பள்ளி ,கல்லூரி ,கோவில் அருகில் உள்ள மதுக்கடையால் பெண்கள் படும் துயரங்கள் வெளித்தெரியாதவைகள் ...!!

மது ....
வீட்டுக்கு ...
நாட்டுக்கு ....
யிருக்கு கேடு ...!!!
என அரசு அச்சிட்டது...! அந்த  அரசுக்கே  புரியவில்லை என்பது தான் அவிழ்க்க முடியாத புதிர் ....!!???

டாஸ்மாக் இல்லையென்றால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதெல்லாம் வெற்று கூச்சல் ...!!
இதற்கு  முன்பு(டாஸ்மாக் வருவதற்கு முன்பு )
அரசு எப்படி நடந்தது ???
அப்படி அரசு நடத்தினால் போதுமென மக்களே நினைக்கிறார்கள்....!!!

இலவசங்களை கொடுத்து;
மக்களை  கெடுத்து ;சோம்பேறிகளாக மாற்றியது போதும் ...!
இலவசங்களை நிறுத்தினாலே அரசு வருவாய் தானாகவே அதிகரிக்கும் ...
இனியாவது திருந்துவோம் ...

"நம் மகனும். ... மகளும் ...
போதைக்கு அடிமையாகமல் காப்போம்"..!

"வரும் தலைமுறையாவது...
வழிதவறாமல் வாழட்டும்"  ....!!

2 comments:

  1. நன்றாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. உண்மையை சொன்னேன்..... தவறில்லையே...???சொர்ணமித்ரன்...!!??

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...