Thursday, August 14, 2014
"மலட்டு தேசம்..."
@ அன்று ..
உப்பைக்கொண்டு
விடுதலைப்போர் கர்ஜித்தார்
காந்தியடிகள்..!!
இன்று..
மரபணு விதைகள் கொண்டு
நமக்கு அடிமை சாசனrம்
அமைக்கிறது அமெரிக்கா,!!
@ சவப்பெட்டி ஆணிகளை
சப்தமில்லாமல் செதுக்கியது....!!
100 கோடி மக்களையும்
எந்த சிலுவையில் அறைய
போகிறது.....??
@ காந்தி வாங்கிய சுதந்திரம்
காந்தி நோட்டிற்காய்
கடன் படுகிறது..!!
மரபணு விதைகள் எனும்
வேசியிடம்
சிறைபடுகிறாள் இந்திய நிலமகள்..!!
@ முதல்முறையாய்...
கற்பை இழக்கிறது கண்ணகி தேசம்..!!
கருக்கலைப்பு செய்ய
கைவிலங்கோடு
காத்திருக்கிறார்கள்:
என்தேசத்து எட்டப்பன்கள்....!!
எட்டி நின்று அழுகிறது
இந்திய சுதந்திரம்..!!???
@ இந்தியர்களுக்கு மானம்
இருக்கிறது,
மூளை இருக்கிறதா???
மலட்டு விதையால்
இந்திய மண்ணை மட்டுமல்ல
இந்தியர்களையே
மலடாக்க துணிந்து விட்டது...!!
@ இனியும் புரியவில்லையெனில்
இனி நாம் இந்தியர்களல்ல:
அமெரிக்கர்கள்... !!???
============{$$$$$$}========











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...