Sunday, August 10, 2014
மரங்களெனும் அமுதசுரபி
மரங்கள் என்கிற அமுதசுரபி
@ இரவு பொழுது வந்தாலும்
ஊரு உறங்கி கிடந்தாலும்
புரண்டு உறங்க தெரியாத
உறவுக்காரன் இவன்தானே,..!!!
@ இவன்..கக்கும் வாந்தி
எடுத்து வச்சி
உயிர்கள் வாழுது பூமியில..!!
காலம் கொடுத்த கர்ப்பபையில்
நம்மை சுமக்கும் சாமியிவன்.,!!
@ கண்ணீர் வரலன்னா ஒன்னுமில்ல-
மழை
தண்ணி வரலன்னா சங்கடந்தான்,.!!
இவன் நம்ம விட்டு போனதால-இப்ப
அழுகுது பாரு ஊர் குடந்தான்..!!
@ வானம்,பூமி,பெத்தபுள்ள-நித்தம்
நமக்கு சோறு தந்தான்..!!
செஞ்ச நன்றி மறந்ததால-இப்ப
நமக்கு ஊறு தந்தான்..!!
@ தாயி சுமந்தா நம்மயெல்லாம்
பத்துமாசம் மட்டுந்தான..
சாகும் வரைக்கும் நம்மையெல்லாம்
காப்பதிந்த தாய்மடியே..!!
@ காலப் பிடிச்சி கெஞ்சிடுறேன்...
"மரத்த வெட்ட " வேணாமுன்னே..
பெத்தவள வெட்டிடத்தான்
யாருக்காச்சும் மனம் வருமா.,???!!!











super
ReplyDelete