Sunday, August 10, 2014

சுகாதாரன்

                 சுகாதாரன்...

@  கண்மாய்கள் எல்லாவற்றிலும்
      காண்கிறேன்..
      வெளுத்தவர்களின் வியர்வைத்தனம்
      குறையாமல் கூடியது: தண்ணீரில்
       கண்ணீர் கரைசல்...

@    வெள்ளாவின் பானையெல்லாம்- இந்த
       அப்பாவியின் எதிர்காலம்...!!
       படியும் அழுக்கில்தான் வாழ்கிறது;
        யிந்த
       அழுக்குநாயகனின் ஆசை கனவுகள்.,

@     நூலிழையில் பிழைத்தவருண்டு;
         இவனோ
         நூலிழையால் பிழைப்பவன் தினம்...
        இல்லாத பேயை
        ஓட்டுவோர்க்கிடையில்
        இருக்கின்ற அழுக்கை
        விரட்டிடுமிவனே
        இச்சமூகத்தின் சுத்ததாரி...!!!!

@    சத்தமாய் பேசுவோர்க்கிடையில்
       இவனின் சுத்தங்கள்
       சப்தம் கேட்காமல் குமுறியது
       கூலிக்காய்.,!!!

@    நீரை சுவைத்திட ஆற்றின் கரைகள்
       காய்வதியற்கை,.
       வெளுத்த வேட்டி கரைகள்      
       காய்வதற்காய்...
      கரைகளில் காயுமிவந்தான்
      சுகாதாரங்களின் சுயவிரும்பி...!!!

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...