Monday, July 28, 2014

பழங்களின் பெருமைகள்..

பழங்கள் மனித சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நோயற்ற வாழ்வோடு  வாழவைப்பது இந்த பழங்கள் தான்...!!!
    நம்மில் நிறைய பேர்  விலை உயர்ந்த பழங்கள்தான் தரமானதென்றும் விலை மலிவான பழங்கள் சத்துகுறைவானதென எண்ணியிருக்கிறோம் அது தவறு..
        ஆப்பிள் பழம் காஷமீரில் விளைகிறது அது அங்கே விலை மலிவாகத்தான் கிடைக்கும்...விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக அதை சத்து குறைவானது என சொல்லமுடியாது...பல மாநில எல்லைகளையும், வியாபாரிகளிடமும் கை மாறி வருவதால் தமிழ்நாட்டில் விலை உயர்ந்த பொருளாக மாறி விடுகிறது... கொடைக்கானலில் கேரட் மலிவாக கிடைக்கிறது,..அங்கிருந்து சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அதன் விலை உயர்ந்து விடுகிறது..விலை மட்டுமே ஒரு பழத்தின் தரத்தை நிர்ணயிக்கமுடியாது ..!!
        1ரூபாய்க்கு கிடைக்கும் வாழைபழத்தின் சத்துக்கள்  சொல்லிமாளாது.. சதை போடும் பழம் இது என பலபேர் இதனை தவறாக நினைத்து வருகின்றனர் ஒரு வாழைபழத்தின் மொத்த கலோரியே 60-80 கலோரிதான்..அதனால் தாராளமாக அதை உண்ணலாம் சதை போடுமோ என்கிற கவலையே வேண்டாம்!!!
   வாழைபழத்தில் எலும்புக்கு கால்சியம்,இதயத்திற்கு - பொட்டாசியம்,ஹார்மோன் ஊட்டம் மற்றும் நார்ச்த்து அதிகமுள்ளதால் மலமிலக்கியாகவும் செயல்படுகிறது...
        இதை விட அதிக சக்தி வாய்ந்தது கொய்யா பழம்..ஆப்பிளை விட சத்துக்கள் நிறைந்தது என இந்திய உணவியல்கழக ஆய்வகங்களே கூட அடித்து சொல்கின்றன.ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது,மற்றும் நார்சத்து,கனிமசத்து அதீதமாய் அடங்கியுள்ளது,..!!!
             இன்னுமொரு முக்கியமான பழம்  நாட்டுநெல்லிகனி...புற்றுநோய்க்கிருமிகளை கூட அழிக்கவல்ல சக்தி நிறைந்தது நெல்லிகனி..
        இங்கு நான் குறிப்பிட்ட பழங்கள் அனைத்துமே விலை மலிவானவையே..ஆனால் தரத்தில் மிகசிறந்தது...
     சந்தையில் BT ரக பழங்களும் காய்கறிகளும்,நடுத்தரமக்களை குறிவைத்து விற்பனைக்கு வருகின்றன,ஆதலால் அதை முக்கியமாக கவனித்து வாங்கவும்..!!
      எல்லா விதமான பழங்களையும் உண்டு உடலை ஆரோக்கியமாக வைப்போம்..மருத்துவரை மறப்போம்..!!!
        அடுத்ம பதிவில் சந்திப்போம்.நன்றி..!!
        

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...