Friday, July 18, 2014

நலிந்து போன நெசவுதொழில்

11:04 AM By

கைத்தொழில்,விவசாயம்,நெசவு,மண்பாண்டம்,நகைத்தொழில்,இன்னும் எத்தனையோ வகையான கைத்தொழில்களும்.தொழிலாளர்களும்  இந்த சமுதாயத்தை விட்டு மரணித்து கொண்டு  இருக்கிறார்கள்...!!!
        இதற்கெல்லாம் என்ன காரணம் என தெரியாமலே தன் கடைசி கட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவின் மிகப்பெரிய மக்கட் கூட்டம்...!!!
       உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம்,மற்றும் பெரு நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் நேரடியாக ஈடுபடுதல் ..இவைகள் தான் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர்விட்டு ஊர்போக மிக முக்கிய காரணங்கள்.,!!!

அழிந்து போன நெசவுதொழில்:
                 நெசவு தொழிலுக்கு ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி போத்தீஸ்,RMKV, போன்ற பெரு நிறுவனங்கள் நடிகர்,நடிகைகள்.மூலம் விளம்பர யுக்தியை பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றன..சாதாரண நெசவு தொழிலாளி அப்படியல்ல..பெரிய பையில் துணிகளை அடுக்கி கொண்டு வீதி,வீதியாகவும் ,கடைவீதிகளிலும் ஒவ்வொரு தொழிலாளியாக சந்தித்து விற்பனை செய்வார்..!!
காலமாற்றமும்,நாகரீகமும் விளம்பரங்களும் அவருக்கு சாதகமாக இல்லை..!!விளைவு.. மக்கள் ஏசி பொருத்தபட்ட கடைகளை நோக்கி நகர தொடங்குகின்றனர்..அது இறுதியில் கஞ்சிதொட்டி திறந்து அவர்கள் உயிரை காக்க வேண்டிய அவல நிலைக்கு இந்த சமூகத்தை ஆளாக்கியுள்ளது,!!
   இந்த விசயத்தில் ஆண்ட,ஆளுகின்றவர்களின் சிந்தனை வேறு விதமாக உள்ளது,பெருநிறுவனங்கள் அரசுக்கு வரி செலுத்துகின்றன..அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு,பொதுக்கூட்டம்,பேரணி போன்றவற்றிற்கும் பெருநிறுவன முதலாளிகள் பெருமளவில் பணம் வழங்குகின்றனர்..இது அரசியல்கட்சிகளுக்கு மிகப்பெரிய உதவியாய் அமைகிறது..மக்களிடம் பணம் வசூலித்து மாநாடு நடத்தும் கட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பது உங்களுக்கு தெரிந்ததே...!! பின் எப்படி இந்த அரசியல்கட்சிகள் சட்டசபையிலும்,பாராளுமன்றத்திலும்,தொழிலாளர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்பார்கள்?? இல்லை கேட்கத்தான் விடுவார்களா???
         இவர்களின் அலட்சியம் நம் மானம்காக்க ஆடை தந்த சமுதாயத்தை துடைத்தெறிந்து விட்டது..!!இதே நிலை அனைத்து கைத்தொழிலுக்கும் பொருந்தும்!!
     இந்த ஒரு சமுதாயம் மட்டுமல்ல,இதே போல் கைத்தொழில்களை நம்பி வாழும் அநேக சமுதாயங்கள் அழிந்து வருகின்றன..இவர்களுக்கெல்லாம் அரசே மாற்று தொழில் ஏற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும்..,!!
  நாம் வாழும் சமூகத்தில் ஒருவன் வீழ்ச்சியடைந்தால் அது மீண்டும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மைத்தான் பாதிக்கும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்..!!!!

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...