Wednesday, January 1, 2014

யதார்த்த கவிதைகள்

ஓர் மழை நேர இரவில்..

@      அம்மாவிடம் செல்லமாய் அடிபடுவதற்கும்
    அவள் கரத்தால் தலை துவட்டவும்;
   வேண்டுமென்றே நனைவதுண்டு..
   ஓலமிட்டு அழும்-அந்த
   ஆகாய கண்ணீரில்..!!

@   பருவபெண் தாண்டி செல்ல
      எழும் கூந்தல் வாசனை போல்
      மழைநேர மண் வாசனைக்காய்
     தியாகம் செய்ததுண்டு..
     இரவு நேர தூக்க பொழுதுகளை...!!

@   உடுப்புகள் மட்டுமல்ல உள்ளம் வரை         நனைந்தாலும்
      மருத்துவமனை வீதி வரை கூட
      எனை அழைத்ததில்லை-என் செல்லமழை..!!

@   கருப்பு நிறம் கண்டிப்பதோ என்றெண்ணி
      ஏற்கனேவே இருந்தாலும்-வாங்கினேன்
      பச்சை வர்ணங்களில் குடைகளை..
      எத்தனையிருந்தாலும் வேண்டுமென்றே
      விடுமுறையளித்திடுவேன் -என் வீட்டு குடைகளுக்கு..!!!

@    எதிர்வீட்டு சிறுமி..
       பக்கத்து வீட்டு பலராமன்...என
       எவர் நனைந்தாலும் விரட்டி விட்டு
       எவருமில்லா சமயம் பார்த்து-நன்றாய்
       நனைந்திடுவேன்-அந்த
ஆகாய பன்னீரில்..!!!

          இதெல்லாம் ஒரு காலம்..இன்று..
         ஆகாய கங்கையுமில்லை,
        இழுத்து துவட்ட அன்னையுமில்லை..!!!??????

 

0 comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...