Sunday, December 22, 2013

சாராயகடை

2000ஆண்டின் பிற்பகுதியில்  ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருந்தது சாராயக்கடை,.குடிப்பவர்கள் தேடி தேடி ,அலைந்து பயந்து அஞ்சி குடித்தனர்...
அப்போது குடிப்பவர்களை போலீஸ் பிடித்தது..
இப்போது அரசாங்கமே அதை விற்கிறது..

   விற்பனை என்றால் சாதாரணமாக அல்ல..இலக்கு வைத்து,.குறிப்பிட்ட நாளில் இத்தனை லட்சம் மதுபாட்டில்களை விற்க வேண்டும் எனவும்,.
எந்த மது வகைகளும் இல்லை என சொல்லாமல் விற்பனை இருக்கவேண்டுமெனவும்..அரசாங்கம் வாய்மொழி உத்தரவு இடுகிறது...

கீழே உள்ள அட்டவனையை பார்த்தால் மதுவின் விற்பனை எவ்வளவு வேகமாய் உயர்ந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்..
     
  எந்த தேசத்திலும் நடக்காத படுபாதகமான ,அபாயகரமான செயலை தமிழக முன்னாள் ,இன்னாள் அரசுகள் செய்துவருகின்றன..
ஒரு தலைமுறையையே இவர்கள் சீரழித்துவிட்டார்கள்..என்றுமே இல்லாத அளவுக்கு மது அடிமைகள் அதிகமாகி விட்டனர்,,

எத்தனையோ பெண்களுக்கு தாலியறுத்து வெள்ளைசேலை உடுத்தி அழகு பார்க்கிறது,.,இந்த அரசாங்கம்..மதுக்கடைகளை கடைவீதிகளிலும்,ஆலயத்தினருகேயும்,கல்விசாலைகளின் ,அருகேயும்,அமைத்து பொதுமக்களையும் குறிப்பாக பெண்களையும்,குழந்தைகளையும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கிவிட்டதற்க்கும்..அதிக கொலைகளுக்கும்,கொள்ளைகளுக்கும்,.மது தான் காரணமென்பதை யாராலும் மறுக்க முடியாது...
     
  எல்லாவற்றிற்க்கும் மேலாக அதை விற்கும் டாஸ்மாக்கடைகளில் வேலை செய்வோர்க்கு ஒருவரும் பெண்தர மறக்கிறார்கள்..என்கிற குற்றசாட்டும் உள்ளது.. இப்படி சமூகத்தில் அனைத்து தவறுகளுக்கும் சீரழிவுக்கும் காரணமான மதுகடைகளை அரசு கை விட்டு ,பொருளாதாரத்தை உற்பத்தி செய்யகூடிய மாற்று வழிமுறைகளில் அரசு ஈடுபடவேண்டும்..அதை செய்ய வைக்க கூடிய தகுதி தமிழ் பெண்களுக்கு மட்டுமே உள்ளது...
        ஆம்..ஒவ்வொரு பகுதிலும் ,பெண்கள் மொத்தமாய் திரண்டு
மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் ,போராட்டமும் நடத்தி தங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் காட்டினால்  வேறு வழியின்றி வாக்குகள் போய்விடுமோ..என்பதற்காகவாவது அரசு நிச்சயமாய் இறங்கி வருமென நான் நம்புகிறேன்..
   கடந்த தலைமுறையினை இழந்து விட்டோம்..வரும் தலைமுறையாவது காப்போம்..கை கோர்ப்போம்..ஊடகங்கள் செய்ய துணிவில்லாத செயலை நம் குழந்தைகளுக்காகவாவது செய்ய துணிவோம்...!!!!
     ஒவ்வொரு பண்டிகையின் போதும் எந்த பெண் கற்பழிக்கபடுவாளோ,எந்த பெண்குழந்தை பாலியல் வள்ளுறவுக்கு ஆட்படுமோ?என எத்தனை நாளுக்கு நாம் அஞ்சி அஞ்சி நடுங்குவது..?நாளை நம் வீட்டு குழந்தைகள் கூட இதற்கு பலியாகலாம் ..எதுவும் நடந்த பின் அழுது  பலனில்லை..

    மது..களைப்புக்கு அருந்தினாலும் சரி..
    களிப்புக்கு அருந்தினாலும் சரி..அதன்
     விளைவுகள் மோசமானவையே...!!!!

3 comments:

  1. உண்மை.பெண்கள் போராடினால் முடிவு கிடைக்கும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கருத்தை ஏற்று கொண்டமைக்கு நன்றி.சொர்ணமித்ரன்.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...