Wednesday, November 27, 2013

நாகரீகம்

12:39 AM By

நாகரீகம் என்கிற பெயரில் நாம் இழந்தது நிறைய இழந்திருக்கிறோம்..நிறைய பெற்றிருக்கிறோம்..அதை மறுப்பதற்கில்லை..ஆனாலும் இழப்புகள் அதிகமே..
நாகரீகம் என சொல்லி உணவை குறைத்தோம்..
உடைகளை குறைத்தோம்..
உறவுகளையும் குறைத்தோம்..
இப்போது ஆயுள்காலத்தையும் குறைக்கிறோம்..
நாகரீகத்தால் தேவைகள் அதிகமானது,அதனால் அதிக உழைப்பு தேவைபட்டது,இருக்க நேரமின்றி ஓயாது உழைக்கும் மனித இயந்திரமானோம்..என்னையும் சேர்த்து..
தவறுக்கு பின்தான் தண்டனையின் வலி புரிகிறது...

இயற்கையான உணர்வுகளுக்கு நேரமில்லாததால்
செயற்கையான பிரச்சனைகள் முளைத்தன..
ஆடம்பரமாய் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் வைத்தியங்களே தேவைபடுகிறது..

குழந்தைகளும் கூட இதற்கு பழியாகிறார்கள்..அதனால் தவறு சிறு வயதிலே
முளைவிட துவங்குகிறது..
விளைவுகள் வேர் விட துவங்குகிறது....!!

நம் முன்னோர்கள் நமக்கு தந்த பூமியை அடுத்த
தலைமுறைக்கு நாம் தராமல் துரோகம் செய்தோம்..!!
அதற்கு பழியையும் விஞ்ஞானத்தின் மீது திணித்தோம்..!!
நமக்கு தான் தவறை நாம் ஏற்பது பிடிக்காதே..!??

இனிமேல் திருந்துதல் என்பது சிரமம்தான் தவறை குறைக்க முயற்சிப்போம்..!!????

2 comments:

  1. நல்ல சிந்தனை.தொடருங்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி..சொர்ணமித்ரன்..

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...