Wednesday, September 28, 2016
தேவதைகள் வானத்தில் இல்லை,
இது ..
மகளை பெற்ற எல்லா அப்பாக்களின் நினைவுகளின் பதிவுகள்...!!!
===================================
}} தேவதைகள் வானத்தில் இல்லை {{
======================================
அன்பென்பது....
அன்பிலானது....
என்பதை...
அன்பிலான
உன்னால்
உணர்ந்தேன்.....
நான்....!!!!
{{{{{================}}}}}
என் ...
வலிகளுக்கெல்லாம்
பெருமருந்து.....
நீ தானம்மா.....!!!!
{{{{=========================}}}}
நீ.....
வசிக்கும் வரையில்
இது தேவதைகள் வாழும் வீடு....!!!
{{{{{{{ ====================}}}}}}
நீ சிணுங்கையில்,
வெளிவரும் கோபங்களை எல்லாம்
விழுங்கி விடுகிறது....
உன் ஒற்றை புன்னகை....!!!!
{{{{{{{====================}}}}}}
கோடைகாலத்தில்
எல்லா குளங்களும் வற்றினாலும்;
உன்....
புன்னகை குளக்கரையில்
அமர்ந்திருக்கும்
கொக்கு நான்....!!!
{{{{{{{{ ======================}}}}}}
நீ....
பொம்மைகளை கூட
அழவிடுவதில்லை....!!!
நான் தான் உன்னை
அழவைத்துவிடுகிறேன்....!!!
மன்னித்துவிடு என்னை....!!!
{{{{{{{=====================}}}}}}
உன்னை அடித்ததனால்
ரணமானது மனது...
நீயோ...
இதழோர புன்னகையால்
மீண்டும் வந்தாய்
அப்பா... என்றபடி
தற்கொலைக்கு
முயற்சித்தன கைகள்....!!!
{{{{{=====================}}}}}
நீ ஆசைபட்டதை
அழுதோ, அன்பாலோ,
வாங்கிவிடுகிறாய்...!!
தரவில்லையெனில்,
ஓவென்று அழுகிறாய்...!!!
நான்...
உள்ளுக்குள் அழுகிறேன்...!!!
{{{{{{===================}}}}}
அடிக்கடி நான்,
உச்சரிப்பது உன்பெயரையே....
உன் அம்மாவை அழைக்கும் போதும்..
முண்டியடித்துக்கொண்டு,
உன் பெயரே ஓடி வருகிறது...!!!
செல்லமாய் கோபிக்கிறாள்
அவள்...!!!
{{{{{{{{================== }}}}}}}
கோபங்களோடு
வீடு நுழையும் என்னையும்....
புன்னகை சிந்த வைக்கும்
பனித்துளி.....
நீ.....!!!!
{{{{{{==========================}}}}}}
மனைவி என்கிற பதவியை
உன் அம்மாவுக்கு கொடுத்தேன்...
அவள் மகள் என்கிற பொக்கிஷத்தை
என்னிடம் கொடுத்தாள்...!!
நீயோ அப்பா என்கிற
பதவி உயர்வளித்து என்னை
பெருமை படுத்தினாய்....!!!
தலை நிமிர்கிறது குடும்பம்....!!!
{{{{{{{==========================}}}}}











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...