Wednesday, July 27, 2016

கவிதைக்காடு

3:14 AM By

"ஹைக்கூ மின்னல்கள் "....!!!

==================================
எந்த கொத்தன் கட்டினானோ ??
ஆகாய சுவரெங்கும்
ஒரே விரிசல்...!!
"மின்னல்"...!!

===========================

சிறுக,சிறுக சேர்த்ததையெல்லாம்
வீணாக்கியது வானம்..!!
   "மழை"....!

==================================

அழகுபடுத்திய முகத்தை
அசிங்கபடுத்தினாள் அன்னை..?!!!
" திருஷ்டிபொட்டு"...!!!!

==================================

மனித அறிவு,
கடவுளுக்குதவியது..
ஆலயந்தனில்
"மெட்டல் டிடெக்டர் "..!!

=================================

விமானங்கள் மோதாத
அடுக்குமாடி குடியிருப்பு...
தேன்கூடு...!!!

=================================

நுகர்ந்த காற்றில்
இரத்ததுர்நாற்றம்...
அருகில் எங்கோ
வெட்டுபட்ட மரங்கள்..!!!

===================================

நல்லசெய்தி  கொண்டுவந்தும்
கிழிபடத்தான் செய்கிறது..
"கடிதம்"....!!!

===========================≠======

எந்த கல்லூரியில்
கற்றுக்கொடுக்கிறார்கள்....
பறவைக்கும் கட்டிடக்கலை...
   "தூக்கணாங்குருவி"....!!!!

==================================

1 comments:

ஏதாவது சொல்லிட்டுப்போங்க...