Sunday, November 20, 2016
கருப்புபணம்- black money
கருப்பு பணம்-blackmoney
கருப்பு பணம்....
இதை ஒழிக்க முடியுமா???
ஒழியுமா??
அல்லது ...
ஒடுக்கவாவது முடியுமா??
ஒடுங்குமா???
ஒழிக்க முடியுமெனில் ஏன் எவரும் இந்த வேலையை செய்யவில்லை???
ஒழிக்க முடியாதெனில் இப்போது செய்வது பாமர மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமா??
இப்படி பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது.. ்!!!
அரசுக்கு வரி கட்டாமல் குறைந்த லாபத்தை மட்டுமே காட்டி, தன் வருமானத்திற்கு அதிகமாக பணத்தையோ, அல்லது சொத்தையோ, சேமித்து வைத்திருந்தால் அவைகள் தான் கருப்பு பண பட்டியலில் இடம்பெறுகின்றது...!!!
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 18% மட்டுமே வரி ஏய்ப்பு செய்யகூடிய, நடிகர்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள்,அதிகாரிகள், மற்றும் தொழிலதிபர்கள்..ஆவார்கள்..!!
இவர்களை மட்டும்
தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால் எல்லா பிரச்சனைகளுமே முடிந்து விடும்...!!!
நாடெங்கும் உள்ள ....
தனியார், மருத்துவ மனைகள், பள்ளி,கல்லூரிகளில் சோதனை செய்தாலே
பல கோடி கருப்பு பணங்கள் வெளிவரும்...!!!
அதையெல்லாம் யாரும் செய்வதில்லை...!!!
இதில்...
ஒன்றை கவனித்து பார்த்தீர்களானால்,மேலே சொன்ன வரிஏய்ப்பு சமூகத்தில் இருந்து தான்,நமக்கு எல்லா அரசியல் தலைவர்களும் உருவாகி,
பல்வேறு துறைகளில்,
மாநிலங்களிலும்,
மத்திய அரசுபதவிகளிலும் இடம்பெற்று நம்மை நேரடியாகவோ,
அல்லது மறைமுகமாகவோ ஆட்சி செய்கின்றனர்...!!!
நம்ம ஊர் எம்ஜியார், விஜயகாந்த்,குஷ்பூவில் தொடங்கி,
நக்மா, என்,டி,ராமாராவ்,
SRM,பச்சமுத்து, ஆந்திராவின் ரெட்டி சகோதரர்கள், கிரிக்கெட் வீரர் சித்து,முகமது கைப்,ரத்தோர், கிரண்பேடி, எ.வ.வேலு, வி.கே.சிங்,சிதம்பரம்,அருண்ஜெட்லி, மன்மோகன் சிங், பாலிவுட் நடிகர்
கோவிந்தா உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகள்,தொழிலதிபர்கள் இதற்கு உதாரணங்கள்... !!
என்னுடைய சந்தேகம் இதுதான்...
கருப்பு பணம் யாரிடம் இருக்கின்றது என நாம் சந்தேகபடுகின்றோமோ...
அவர்களே ,...
அவர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை எப்படி கொண்டுவருவார்கள்
என்பது தான்...!!!???
இதற்கிடையில்...
அவர்கள் தான் இதை ஆரவாரமாக வரவேற்கவும் செய்கிறார்கள்...
இதன் அர்த்தம் தான் என்ன என தெரியாமல் குழம்பி கிடப்பது மறுபுறம்...!!
ஆனால்.....
ஏழை மக்களோ,அவர்களை பாதிப்படைய செய்த, பணக்காரர் களின் பணமெல்லாம் செல்லாத காகிதமாக மாறி போனதாக எண்ணி மனமகிழ்வு அடையும் ஒரு வித மனநோய்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்... அது தவறான வழிமுறை...!!!
எந்தவொரு பணக்காரனும் சேமிப்பு க்கு அதிகமான பணத்தை, காகிதமாக ஒருபோதும் வைத்திருப்பதில்லை...
இடம், பொருட்கள், நகைகள்,பங்கு பத்திரங்கள்,LIC, தங்க கட்டிகள்,என பலவிதமான பொருட்களில் முதலீடு செய்து வைக்கிறார்கள்...!!
அவர்களுக்கு ஆலோசனை சொல்ல ஆடிட்டர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.. நமக்குத்தான் யாரும் இல்லை...!!!
எந்த பணக்காரனும் ,
அரசியல் வாதியும், அதிகாரியும் ,நடிகர்களும், கலங்கவில்லை..!!
நடுத்தர, அடித்தட்டு, மக்கள் தான் கலங்கி போயுள்ளனர்...!!
ATM மிசினில் புதிய 500,1000, 2000 ரூபாய் பொருத்துவதற்கான, வேலையும்,இயந்திரம் தானாக பணபரிவர்த்தனை செய்வதற்கான சாப்ட்வேர் வேலைகளும், நாடு முழுவதும் செய்து முடிக்க ,குறைந்த பட்சம் இரண்டு மாதகாலம் தாராளமாக ஆகலாம்...!!!
இதனால்...
மிகப்பெரிய பொருளாதார தேக்கநிலை உருவாகும்,ஏற்கனவே தேசம் , செழிப்பான பொருளாதார நிலைகளில் இல்லை என்பது
அனைவரும் அறிந்நதே...!!
தற்போதைய சூழல் அதை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்...!!
அடுத்த மூன்று மாதங்களில் நாம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிவரலாம்...
வியாபாரிகள், விற்பனை நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக வேண்டி வரும்...!!!
மாற்றி யோசித்தால்...
ஒருவேளை பல கோடி ,கறுப்பு பணம் கைப்பற்றலால், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே அடித்தட்டு மக்கள் உண்மையான, நிம்மதி பெருமூச்சு விடமுடியும்...!!!
ஒருவேளை ,மக்கள் எதிர்ப்பு அதிகமானால், பொதுமக்கள் ஒத்துழைக்காததால் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றுகூட கூறிவிடலாம்...!!
ஆனால்...
தினசரி 500 சம்பாதிக்கும்
சாதாரண தொழிலாளியின்
மாத வருமானம் 15,000 ₹,என வைத்துக்கொள்வோம்...
10,000 செலவு போனால் மீதமிருக்கும் 5000 ஒருவருடம் கழித்து 60,000 ஆகும்...
பத்து வருடம் கழித்து 6,00,000 இலட்சம் ஆகும்... குறைந்தது ஐந்து இலட்சமாவது சேமிப்பு பணமாக இருக்கும்....
மகளுக்கு, தங்கைக்கு, திருமணம் முடிக்க, ஆசையாய் ஒரு வீடு கட்ட, என சிக்கனமாக சேமிப்பது தனிமனித கடமைதானே....
அவனை ,பணக்காரர்கள் பட்டியலில் சேர்க்க முடியாதல்லவா...???
அதற்கு கணக்கு காட்ட சொன்னால், அதற்கு வரி கட்ட சொன்னால்,
பாவம் அவன் நிலைமை...!!!??
ஒரு திட்டத்தை நிறைவேற்றினால் சில சிரமங்கள் வரத்தான் செய்யும்,
அதை ஏற்பது குடிமக்களின் கடமை...!!!
ஆனால்...
எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல்,முட்டாள்தனமாக திணிக்கபடும், எதையும்,
எந்த குடிமகனும் ஏற்கமாட்டான்...!!!











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...