Sunday, November 20, 2016

கருப்புபணம்- black money

கருப்பு பணம்-blackmoney

கருப்பு பணம்....
இதை ஒழிக்க முடியுமா???
ஒழியுமா??
அல்லது ...
ஒடுக்கவாவது முடியுமா??
ஒடுங்குமா???
ஒழிக்க முடியுமெனில் ஏன் எவரும் இந்த வேலையை செய்யவில்லை???
ஒழிக்க முடியாதெனில் இப்போது செய்வது பாமர மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமா??

இப்படி பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது.. ்!!!

அரசுக்கு வரி கட்டாமல் குறைந்த லாபத்தை மட்டுமே காட்டி, தன் வருமானத்திற்கு அதிகமாக பணத்தையோ, அல்லது சொத்தையோ, சேமித்து வைத்திருந்தால் அவைகள் தான் கருப்பு பண பட்டியலில் இடம்பெறுகின்றது...!!!

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 18% மட்டுமே வரி ஏய்ப்பு செய்யகூடிய, நடிகர்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள்,அதிகாரிகள், மற்றும் தொழிலதிபர்கள்..ஆவார்கள்..!!
இவர்களை மட்டும்
தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால் எல்லா பிரச்சனைகளுமே முடிந்து விடும்...!!!

நாடெங்கும் உள்ள ....
தனியார், மருத்துவ மனைகள், பள்ளி,கல்லூரிகளில் சோதனை செய்தாலே
பல கோடி கருப்பு பணங்கள் வெளிவரும்...!!!
அதையெல்லாம்   யாரும் செய்வதில்லை...!!! 

இதில்...
ஒன்றை கவனித்து பார்த்தீர்களானால்,மேலே சொன்ன வரிஏய்ப்பு சமூகத்தில் இருந்து தான்,நமக்கு எல்லா அரசியல் தலைவர்களும் உருவாகி,
பல்வேறு துறைகளில்,
மாநிலங்களிலும்,
மத்திய அரசுபதவிகளிலும் இடம்பெற்று நம்மை நேரடியாகவோ,
அல்லது மறைமுகமாகவோ ஆட்சி செய்கின்றனர்...!!!

            நம்ம ஊர் எம்ஜியார், விஜயகாந்த்,குஷ்பூவில் தொடங்கி,
நக்மா, என்,டி,ராமாராவ்,
SRM,பச்சமுத்து, ஆந்திராவின் ரெட்டி சகோதரர்கள், கிரிக்கெட் வீரர் சித்து,முகமது கைப்,ரத்தோர், கிரண்பேடி, எ.வ.வேலு, வி.கே.சிங்,சிதம்பரம்,அருண்ஜெட்லி, மன்மோகன் சிங், பாலிவுட் நடிகர்
கோவிந்தா உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகள்,தொழிலதிபர்கள் இதற்கு உதாரணங்கள்... !!

என்னுடைய சந்தேகம் இதுதான்...

கருப்பு பணம் யாரிடம் இருக்கின்றது என நாம் சந்தேகபடுகின்றோமோ...
அவர்களே ,...
அவர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை எப்படி கொண்டுவருவார்கள்
என்பது தான்...!!!???

இதற்கிடையில்...
அவர்கள் தான் இதை ஆரவாரமாக வரவேற்கவும் செய்கிறார்கள்...
இதன் அர்த்தம் தான் என்ன என தெரியாமல் குழம்பி கிடப்பது மறுபுறம்...!!

ஆனால்.....
ஏழை மக்களோ,அவர்களை பாதிப்படைய செய்த, பணக்காரர் களின் பணமெல்லாம் செல்லாத காகிதமாக மாறி போனதாக எண்ணி மனமகிழ்வு அடையும் ஒரு வித மனநோய்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்... அது தவறான வழிமுறை...!!!

எந்தவொரு பணக்காரனும் சேமிப்பு க்கு அதிகமான பணத்தை, காகிதமாக ஒருபோதும் வைத்திருப்பதில்லை...
இடம், பொருட்கள், நகைகள்,பங்கு பத்திரங்கள்,LIC, தங்க கட்டிகள்,என பலவிதமான பொருட்களில் முதலீடு செய்து வைக்கிறார்கள்...!!
அவர்களுக்கு ஆலோசனை சொல்ல ஆடிட்டர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.. நமக்குத்தான் யாரும் இல்லை...!!!

எந்த பணக்காரனும் ,
அரசியல் வாதியும், அதிகாரியும் ,நடிகர்களும், கலங்கவில்லை..!!
நடுத்தர, அடித்தட்டு, மக்கள் தான் கலங்கி போயுள்ளனர்...!!

ATM  மிசினில் புதிய 500,1000, 2000 ரூபாய் பொருத்துவதற்கான, வேலையும்,இயந்திரம் தானாக பணபரிவர்த்தனை செய்வதற்கான சாப்ட்வேர் வேலைகளும், நாடு முழுவதும் செய்து முடிக்க ,குறைந்த பட்சம் இரண்டு மாதகாலம் தாராளமாக ஆகலாம்...!!!
   இதனால்...
மிகப்பெரிய பொருளாதார தேக்கநிலை உருவாகும்,ஏற்கனவே தேசம் , செழிப்பான பொருளாதார நிலைகளில் இல்லை என்பது
அனைவரும் அறிந்நதே...!!
        தற்போதைய சூழல் அதை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்...!!

அடுத்த மூன்று மாதங்களில் நாம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிவரலாம்...
வியாபாரிகள், விற்பனை நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக வேண்டி வரும்...!!!
       மாற்றி யோசித்தால்...
ஒருவேளை பல கோடி ,கறுப்பு பணம் கைப்பற்றலால், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே அடித்தட்டு மக்கள் உண்மையான, நிம்மதி பெருமூச்சு விடமுடியும்...!!!
    ஒருவேளை ,மக்கள் எதிர்ப்பு அதிகமானால், பொதுமக்கள் ஒத்துழைக்காததால் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றுகூட கூறிவிடலாம்...!!
ஆனால்...
தினசரி 500 சம்பாதிக்கும்
சாதாரண தொழிலாளியின்
மாத வருமானம் 15,000 ₹,என வைத்துக்கொள்வோம்...
10,000 செலவு போனால் மீதமிருக்கும் 5000 ஒருவருடம் கழித்து 60,000 ஆகும்...
பத்து வருடம் கழித்து 6,00,000 இலட்சம் ஆகும்... குறைந்தது ஐந்து இலட்சமாவது சேமிப்பு பணமாக இருக்கும்....
மகளுக்கு, தங்கைக்கு, திருமணம் முடிக்க, ஆசையாய் ஒரு வீடு கட்ட, என சிக்கனமாக சேமிப்பது தனிமனித கடமைதானே....
அவனை ,பணக்காரர்கள் பட்டியலில் சேர்க்க முடியாதல்லவா...???
அதற்கு கணக்கு காட்ட சொன்னால், அதற்கு வரி கட்ட சொன்னால்,
பாவம் அவன் நிலைமை...!!!??

     ஒரு திட்டத்தை நிறைவேற்றினால் சில சிரமங்கள் வரத்தான் செய்யும்,
அதை ஏற்பது குடிமக்களின் கடமை...!!!
ஆனால்...
எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல்,முட்டாள்தனமாக திணிக்கபடும், எதையும்,
எந்த குடிமகனும் ஏற்கமாட்டான்...!!!

Wednesday, November 16, 2016

Wednesday, September 28, 2016

தேவதைகள் வானத்தில் இல்லை,

இது ..
மகளை  பெற்ற எல்லா அப்பாக்களின் நினைவுகளின் பதிவுகள்...!!!

===================================

}}  தேவதைகள் வானத்தில் இல்லை  {{

======================================

அன்பென்பது....
அன்பிலானது....
என்பதை...
அன்பிலான
உன்னால்
உணர்ந்தேன்.....
                   நான்....!!!!

{{{{{================}}}}}

என் ...
வலிகளுக்கெல்லாம்
பெருமருந்து.....
              நீ தானம்மா.....!!!!

{{{{=========================}}}}

நீ.....
வசிக்கும் வரையில்
இது தேவதைகள் வாழும் வீடு....!!!

{{{{{{{ ====================}}}}}}

நீ சிணுங்கையில்,
வெளிவரும் கோபங்களை எல்லாம்
விழுங்கி விடுகிறது....
        உன் ஒற்றை புன்னகை....!!!!

{{{{{{{====================}}}}}}

கோடைகாலத்தில்
எல்லா குளங்களும் வற்றினாலும்;

உன்....
புன்னகை குளக்கரையில்
அமர்ந்திருக்கும்
கொக்கு நான்....!!!

{{{{{{{{ ======================}}}}}}

நீ....
பொம்மைகளை கூட
அழவிடுவதில்லை....!!!

நான் தான் உன்னை
அழவைத்துவிடுகிறேன்....!!!

        மன்னித்துவிடு என்னை....!!!

{{{{{{{=====================}}}}}}

உன்னை அடித்ததனால்
ரணமானது மனது...

நீயோ...
இதழோர புன்னகையால்
மீண்டும் வந்தாய்
அப்பா... என்றபடி

தற்கொலைக்கு
முயற்சித்தன கைகள்....!!!

{{{{{=====================}}}}}

நீ ஆசைபட்டதை
அழுதோ, அன்பாலோ,
வாங்கிவிடுகிறாய்...!!

தரவில்லையெனில்,
ஓவென்று அழுகிறாய்...!!!
நான்...
உள்ளுக்குள் அழுகிறேன்...!!!

{{{{{{===================}}}}}

அடிக்கடி நான்,
உச்சரிப்பது உன்பெயரையே....

உன் அம்மாவை அழைக்கும் போதும்..
முண்டியடித்துக்கொண்டு,
உன் பெயரே ஓடி வருகிறது...!!!

செல்லமாய் கோபிக்கிறாள்
அவள்...!!!

{{{{{{{{================== }}}}}}}

கோபங்களோடு
வீடு நுழையும் என்னையும்....

புன்னகை சிந்த வைக்கும்
பனித்துளி.....
          நீ.....!!!!

{{{{{{==========================}}}}}}

மனைவி என்கிற பதவியை
உன் அம்மாவுக்கு கொடுத்தேன்...
அவள் மகள் என்கிற பொக்கிஷத்தை
என்னிடம் கொடுத்தாள்...!!

நீயோ அப்பா என்கிற
பதவி உயர்வளித்து என்னை
பெருமை படுத்தினாய்....!!!

தலை நிமிர்கிறது குடும்பம்....!!!

{{{{{{{==========================}}}}}

Sunday, September 25, 2016

காதல் கவிதைகள்

)))))---இது காதல் வீதி---((((((
               
என்னவளே...
நீயும், நானும் சேர்ந்து....
கடற்கரையில் எழுதியவைகளை;
காதலின் சின்னமென
பத்திரபடுத்திக்கொண்டது....
கடல்....!!!!

==========√√√√√√√√√√√√√√=======

என்னவளே.....
நீ  "ஹலோ" என்றுக் கூறியதை;
கவிதை எனக்கூறி ,
என்னிடம் சண்டையிடுறது....

#அலைபேசி ...!!

==========√√√√√√√√√√√√========

உன் மீதான காதலை,
மூட்டை,மூட்டையாய்
வைத்துக்கொண்டு...
வீதி, வீதியாய்,
திரிகிறேன் நான்......!!!!

==========√√√√√√√√√√√√√========

உன்....
நினைவுகள் வரவில்லையெனில்
என்னோடு உறங்க
மறுக்கின்றன....
என் தலையணைகள்....!!!!!

========√√√√√√√√√√√√√========

என்வீட்டிலிருந்து...
கிளம்பும் ,
வண்ணத்துப்பூச்சிகளும்...
மலரென்று நினைத்து,
உன்னையே சுற்றி வருகின்றன...
என்னைபோலவே...!!!

=========√√√√√√√√√√√√√√========

முத்தம் என்கிற...
சத்துமாத்திரைகளை
உன்...
கண்களாலேயே எனக்கு
பரிமாறுவது தான்,
விசித்திரத்திலும் விசித்திரம்....!!!

=====√√√√√√√√√=====√√√√√√=====

Wednesday, July 27, 2016

கவிதைக்காடு

3:14 AM By

"ஹைக்கூ மின்னல்கள் "....!!!

==================================
எந்த கொத்தன் கட்டினானோ ??
ஆகாய சுவரெங்கும்
ஒரே விரிசல்...!!
"மின்னல்"...!!

===========================

சிறுக,சிறுக சேர்த்ததையெல்லாம்
வீணாக்கியது வானம்..!!
   "மழை"....!

==================================

அழகுபடுத்திய முகத்தை
அசிங்கபடுத்தினாள் அன்னை..?!!!
" திருஷ்டிபொட்டு"...!!!!

==================================

மனித அறிவு,
கடவுளுக்குதவியது..
ஆலயந்தனில்
"மெட்டல் டிடெக்டர் "..!!

=================================

விமானங்கள் மோதாத
அடுக்குமாடி குடியிருப்பு...
தேன்கூடு...!!!

=================================

நுகர்ந்த காற்றில்
இரத்ததுர்நாற்றம்...
அருகில் எங்கோ
வெட்டுபட்ட மரங்கள்..!!!

===================================

நல்லசெய்தி  கொண்டுவந்தும்
கிழிபடத்தான் செய்கிறது..
"கடிதம்"....!!!

===========================≠======

எந்த கல்லூரியில்
கற்றுக்கொடுக்கிறார்கள்....
பறவைக்கும் கட்டிடக்கலை...
   "தூக்கணாங்குருவி"....!!!!

==================================

Tuesday, July 26, 2016

மாபெரும் பொழுதுபோக்கு மையம்...

9:30 AM By

===============================

மாபெரும் பொழுதுபோக்கு மையம்
இன்னும் திறக்கபடவில்லை....
உறங்குகிறாள்....
   என் மகள்....!!!

***********************************

மரித்தபின்
சொர்க்கம் தேடுவதை விட...
வாழும் போதே அனுபவிக்கிறேன்...
என் மகளோடு....!!!

************************************

வாசலில்லா வீடுதான்...
ஆனாலும் கொள்ளை அழகு...!!
கடற்கரையில்...
மகளின் கைவண்ணம்....!!!

************************************

மகளின்...
அழுகை நிறுத்தும் கருவி...
அம்மாக்கள் அல்ல...
அலைபேசியே...!!!

*************************************

Friday, March 4, 2016

நண்பா... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

மன அழுத்தம் நீங்க....

படித்ததில்.... பிடித்தது...!!!

ஒரு மனிதனின் அறிவு எல்லோருக்கும் பயன்படட்டும்....!!!

"மன அழுத்தம் இன்றி  வாழ மிகச்சிறந்த சில வழி முறைகள்.!"

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரியஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டியபணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல்செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம்வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்யமுயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும்.இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்துநிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம்வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பதுபோன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும்அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும்இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம்செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மனஇறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவுஅவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துதூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காகஅடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாதபொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல்நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப்பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடுசெய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும்முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ளமுயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டஉண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளிவிடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வதுஎன மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள்செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமானவேலைகள் மனதைஇலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்...!!

#இதை எழுதிய நண்பர் யாரென்று தெரியவில்லை?? இருந்தாலும் அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....!!!